அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கல்லுாரணியில் அனுப்ப கவுண்டர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் காலசங்கல்பம், கணபதி பூஜை, வேதிகா பூஜை, ஸ்ரீ அக்த ஹோமம் உட்பட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு விமான கோபுரம், சித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சமூக இடை வெளி விட்டு கலந்து கொண்டனர்.