திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆதி பிரம்மோற்சவ விழாவில், உறையூர் கமல்லி நாச்சியாருடனான நம்பெருமாள் சேர்த்தி சேவை நடந்தது.
விடுபட்ட விழாக்களை நடத்த வேண்டும் என்று ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளதால், பங்குனித் தேர் திருவிழாவான ஆதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் உறையூர் கமல்லி நாச்சியாருடனான நம்பெருமாள் சேர்த்தி சேவை நடந்தது. கொரோனா பொது முடக்கத்தால் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை பக்தர்கள் காண கோயில் இணைய தளத்தில் நேரலை செய்யப்படுகிறது.