Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: வேண்டாமே தயக்கம் விருச்சிகம்: வருது பதவி உயர்வு விருச்சிகம்: வருது பதவி உயர்வு
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை)
துலாம்: தேவை பொறுமை
எழுத்தின் அளவு:
துலாம்: தேவை பொறுமை

பதிவு செய்த நாள்

22 ஆக
2020
05:08

சுக்கிரனை ராசி நாதனாக கொண்ட உங்களுக்கு ராகு, கேதுப் பெயர்ச்சி சற்று சோதனையளிக்கலாம். ராசிக்கு 8 க்கு ராகுவும் 2க்கு கேதுவும், இடம் பெயர உள்ளன. பொருளாதார ரீதியாக சிரமம் ஏற்படலாம். நினைத்தது நடக்காமல் இழுபறி உருவாகும்.  நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருப்பதால் வருத்தம் கொள்வீர்கள். நெருக்கமானவர்களும் விலகும் சூழல் வரலாம். ஆனாலும் நேர்மை தவறாமல் நடப்பீர்கள்.  2ல் உள்ள கேதுவை சனி பார்ப்பதால் கடுஞ்சொல் அடிக்கடி வெளிப்படலாம். விருப்பமான உணவை சரியான நேரத்திற்கு உட்கொள்ள இயலாது. மனதில் விரக்தி குடிபுகலாம். வீண் பிரச்னை குறுக்கிடலாம்.  ஒன்றரை ஆண்டுக்கு வீண் வாக்குவாதம், கடும்சொல் பேசுவதை தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் ராகு, கேதுவின் பெயர்ச்சிக்குப் பின் தேவை பொறுமை ஒன்றே.

குடும்ப நிலை: குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு உருவாகலாம். இடம், பொருள் அறிந்து பேசுவது நல்லது. மனைவி, பிள்ளைகளின் பெயரில் சொத்து வாங்கலாம். உறவினருடன் விலகியிருப்பது நல்லது.  நல்லது செய்யப் போனாலும் பிறருக்கு தவறாகத் தோன்றலாம். பெரியவர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுங்கள். வயதில் மூத்தவர்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவது நல்லது.

தொழில்: 8ம் இடத்து ராகு தடைகளை உண்டாக்கினாலும் குரு, சனியின் பார்வை பலத்தால் தடை விலகும். விடாமுயற்சியுடன் செயல்படுவது அவசியம். பணியில் அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் பொறுமை காத்தால் வெற்றிநிச்சயம். சக ஊழியர்கள் மீது வெறுப்பு மேலோங்கும். இந்த நேரத்தில் ஏற்படும் அனுபவம் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். வெளிநாட்டு வேலையை கைவிட்டு உள்நாட்டில் வேலை தேடுவது நல்லது. ஆடிட்டிங், வங்கி, இன்ஷ்யூரன்ஸ் துறையினர், பணத்தைக் கையாள்பவர்கள்  விழிப்புடன் இருப்பது அவசியம். பணியாளர்கள் மற்றவர் தவறுக்கு பொறுப்பேற்கும் சூழல் வரலாம். தன் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
 
நிதி நிலை : கேதுவால் சேமிப்பு கரையும். ராகு அமரும் ஸ்தானத்தின் பலத்தை உயர்த்துவார். கேது நேர் மாறாக அமரும் இடத்தின் வலிமையைக் குறைப்பார். வருமானம் தடைபடும். விரயஸ்தானத்திற்கு ராகு வருவதால் வீண் செலவு அதிகமாகும். பணப்பற்றாக்குறை ஏற்படும். தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை பத்திரப்படுத்த வேண்டிய நேரம் இது.

பெண்கள்: மனதில் குழப்பம், வீண்பயம் குறுக்கிடும். குடும்ப பிரச்னையை யாரிடமும் வெளிப்படுத்தாதீர்கள். உங்கள் வீழ்ச்சிக்காகக் காத்திருப்பவர்கள் பயன்படுத்த வாய்ப்புண்டு. உங்களின் வார்த்தைகளைக் கொண்டே எளிதில் வீழ்த்த நினைப்பர். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுப்பது நல்லது.

மாணவர்கள்:  கடின உழைப்பு தேவை. நீங்கள் அறிவாளியாக இருந்தாலும் தடுமாற்றத்திற்கு ஆளாகலாம். தேர்வு நேரத்தில் கூடுதல் கவனம் தேவை.  சிறு தவறு கூட பெரிய விளைவை ஏற்படுத்தலாம். ஆசிரியர் பயிற்சி, கணினி அறிவியல் துறையினர் ஏற்றம் பெறுவர். ஆராய்ச்சி மாணவர்கள் தடைகளை சந்தித்தாலும் நண்பர் உதவியால் வெற்றி காண்பர்.

உடல்நலம் :
மருத்துவ செலவு அதிகரிக்கும். சிலர் தீக்காயத்திற்கு ஆளாகலாம். சமையலின் போது எச்சரிக்கை தேவை. கண் நோய், நரம்புத் தளர்ச்சி, கை,கால்,மூட்டு வலி, தசைப்பிடிப்பால் அவதிப்படலாம். சத்தான உணவுகளை உண்பது நல்லது.

பரிகாரம்:
* ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்தல்
* வெள்ளியன்று மாரியம்மனுக்கு தீபம்
* பிறந்த நட்சத்திரத்தன்று அன்ன தானம்

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை) »
temple news
அசுவினி; நினைப்பது நடக்கும்.. உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ... மேலும்
 
temple news
கார்த்திகை: வியாபாரத்தில் முன்னேற்றம்..; உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது பகைவர்கள் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்ல காலம் வந்தாச்சு..; உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: குருவால் குறை தீரும்..! உங்கள் நட்சத்திர நாதனான குருவிற்கு, ராகுவும் கேதுவும் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்..கடந்த ஒன்றரை வருட காலமாக உங்கள் ராசிக்கு 8 ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar