Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: தேவை பொறுமை தனுசு: கனவு நனவாகும் தனுசு: கனவு நனவாகும்
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை)
விருச்சிகம்: வருது பதவி உயர்வு
எழுத்தின் அளவு:
விருச்சிகம்: வருது பதவி உயர்வு

பதிவு செய்த நாள்

22 ஆக
2020
05:08

ராகு ராசிக்கு ஏழாம் வீட்டிலும், கேது ஜென்ம ராசியிலும் செப்.1 முதல் பெயர்ச்சியாக உள்ளனர். எப்போதும் சுறுசுறுப்பாக  செயல்படும் நீங்கள் ராசிக்கு வரும் கேதுவால் சற்று நிதானமுடன் செயல்பட வேண்டியிருக்கும். எதிர்பாராத தடைகள்  வேகத்தைக் குறைக்கும். சிறு பிரச்னைகளுக்குக் கூட துவண்டு போகும் வாய்ப்புண்டு. எந்த விஷயத்திலும் அதிக ஈடுபாடின்மை தோன்றும். பலசமயங்களில் அடுத்தவருக்காக விட்டுக் கொடுப்பீர்கள். ராகுவால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும் புதிய நட்பால் பழைய நட்பில் விரிசல் ஏற்படலாம். புதியவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். நண்பர் என்ற போர்வையில் வருபவர்களால் ஏமாற்றத்திற்கு ஆளாகும் வாய்ப்புண்டு. கேதுவால் அனுகூலம், ராகுவால் சிரமத்தையும் சந்திப்பீர்கள்.

குடும்பம்: குடும்ப பிரச்னைக்கு தீர்வு தெரியாமல் சிரமப்படுவீர்கள். குடும்பம், பணவிஷயத்தில் மனைவியின் கருத்தை ஏற்பது நல்லது. அவரது பலம் உங்களை பாதுகாக்கும். பூர்வீகச் சொத்து பிரச்னை விலகும். சனிப்பெயர்ச்சிக்குப் பின் குழப்பம் நீங்கி மகிழ்ச்சி காண்பீர்கள்.

நிதி நிலை : தர்ம சிந்தனையால் கையிருப்பு கரையும். செலவிற்கேற்ற வரவு இருப்பதால் கவலை வேண்டாம். நண்பர்களால் சிலர் பணத்தை இழக்க நேரிடும். அடுத்தவரை  நம்பி ஜாமின் கையெழுத்திட்டால் பிரச்னைக்கு ஆளாவீர்கள்.

தொழில்:  ராகுவால் நீண்ட துார பயணம் செல்லும் வாய்ப்புண்டு. அங்கு புதியவர்களின் நட்பு ஏற்படும். பெண்களால் அவமானத்திற்கு ஆளாகலாம். அறிமுகம் இல்லாத பெண்களிடம் பழக வேண்டாம்.  ரியல் எஸ்டேட், இரும்பு, மருந்து வியாபாரம், செயற்கை உரம் தயாரிப்போர் முன்னேற்றம் காண்பர்.  புதிய உத்திகளால் ஆதாயம் காண்பீர்கள். கூட்டுத்தொழில் லாபகரமாக அமையும்.  பங்குதாரர் செய்யும் சட்டவிரோத செயல்களால் பாதிப்பு ஏற்படலாம். பணியாளர்கள் கவனச்சிதறலால் சிரமத்திற்கு ஆளாவர். சக ஊழியர்களை அனுசரிப்பது நன்மை தரும். மின்வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினர் திடீர் அதிர்ஷ்டத்தால் பதவி உயர்வு பெறுவர்.  

பெண்கள்: குடும்பத்தினர் உங்கள் உழைப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பர். அவர்கள் எதிர்பார்க்கும் உதவியை செய்வீர்கள். விட்டுக் கொடுத்து நற்பெயர் அடைவீர்கள். அதே நேரம் அவ்வப்போது அதிருப்தியால் மனம் குழம்புவீர்கள்.  உணர்வுகளை கணவருடன் பகிர்வது நிம்மதி தரும்.

மாணவர்கள்: ஞாபகமறதியால் அவதிப்படலாம். ஆனால் எழுத்துத்திறன் அதிகரிக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் நல்லமதிப்பெண்  பெறுவீர்கள். ஏரோநாட்டிக்ஸ், ஜெனிட்டிக் இன்ஜினியரிங், இலக்கியம், ஆர்க்கிடெக்சர்  துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பர்.

உடல்நலம்: உடல்நலனில் அக்கறை தேவை. கேதுவால் தோல் நோய், சொறி, சிரங்கு உண்டாகலாம். அடிக்கடி எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் பிரச்னைகளை தவிர்க்கலாம்.

பரிகாரம்
* செவ்வாயக்கிழமை முருகன் வழிபாடு
* தினமும் கந்த சஷ்டிக் கவசம் படித்தல்
* சதுர்த்தியன்று விநாயகருக்கு  நெய்தீபம்

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை) »
temple news
அசுவினி; நினைப்பது நடக்கும்.. உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ... மேலும்
 
temple news
கார்த்திகை: வியாபாரத்தில் முன்னேற்றம்..; உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது பகைவர்கள் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்ல காலம் வந்தாச்சு..; உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: குருவால் குறை தீரும்..! உங்கள் நட்சத்திர நாதனான குருவிற்கு, ராகுவும் கேதுவும் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்..கடந்த ஒன்றரை வருட காலமாக உங்கள் ராசிக்கு 8 ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar