ஊட்டி: காந்தளில் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்ட கோவில் கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. ஊட்டி, காந்தள் முனீஸ்வரன் கோவில் சாலையில், நூறாண்டு பழமை வாய்ந்த முனீஸ்வரன் உள்ளது. கோவிலை அப்பகுதி மக்கள் புனரமைக்க நடவடிக்கை எடுத்தனர், நேற்று, அங்கு கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி கமிஷனர் சரஸ்வதி கூறுகையில், " காந்தள் பகுதியில் அனுமதி பெறாமல் கோவில் கட்டுமான பணி நடப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சென்று ஆய்வு நடத்தப்பட்டது. அனுமதி குறித்து எந்த ஆவணமும் இல்லாததால் பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளேன்." என்றார்.