சபரிமலை: திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை (ஆக.29)திறக்கிறது. செப்.2 வரை பூஜைகள் நடக்கிறது.நாளை மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுகிறார்.
இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆக.30 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து அபிேஷகம், கணபதி ேஹாமம், உஷபூஜை நடைபெறும். செப்.2 வரை தினமும் கணபதிேஹாமம், உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழபூஜை நடைபெறும். ஆக. 31ல் திருவோண சிறப்பு பூஜை நடைபெறும். ஐயப்பன் சுவாமிக்கு மஞ்சள் துண்டு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். ஆக. 30, 31, செப்.1ல் ஒண விருந்து நடைபெறும். இந்த விருந்தில் ஏராளமான பக்தர்களுக்காக பெரிய அளவில் நடப்பது வழக்கம். கொரோனாவால் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் சிறிய அளவில் விருந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவோண பூஜைகள் முடிந்து செப்.2 இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.