சென்னை : ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி திங்கள்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையின் போது பாரம்பரிய உடையணிந்து பூக்களால் கோலமிட்டு இறைவனை வழிபட்டு வணங்குவர். ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கலையிழந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது இடங்களில் மக்கள் கொண்டாட கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் மலையாளம் பேசுபவர்கள் அதிகம் பேர் வசித்து வருவதால் ஆகஸ்ட் 31-ம் தேதி திங்கள்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 12ம் தேதி சனிக்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.