Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? வாசலிலே பூக்கோலம் வீட்டினிலே லட்சுமிகரம்! வாசலிலே பூக்கோலம் வீட்டினிலே ...
முதல் பக்கம் » துளிகள்
ஓணம் பண்டிகையின் சிறப்புகள்!
எழுத்தின் அளவு:
ஓணம் பண்டிகையின் சிறப்புகள்!

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
07:08

பலி பலியாகாதது ஏன்?: அசுரகுலத்தில் பிறந்தாலும் பிறவியிலேயே ஹரிபக்தி கொண்டவன் பிரகலாதன். இரண்யனைக் கொன்ற நரசிம்மன், பிரகலாதனுக்கு லட்சுமியை மடியில் தாங்கியபடி லட்சுமி நரசிம்மனாக காட்சி அளித்து, இனிமேல் உன் வம்சத்தில் பிறப்பவர்களை நான் கொல்ல மாட்டேன் என்று வரம் அளித்தார். பிரகலாதனின் பேரனான வைரோசனனின் மகனே பலிச்சக்கரவர்த்தி. மற்ற அவதாரங்களில் உயிர்களைக் கொல்லும் தோஷம் விஷ்ணுவுக்கு ஏற்பட்டாலும், வாமன அவதாரத்தில் யாரையும் அவர் கொல்லவில்லை. தானம் கேட்ட வாமனர், மூன்றாவது அடிக்காக பலியின் தலையில் திருவடியை வைத்து பாதாளலோகத்திற்கு அனுப்பி விட்டார். தாத்தாவுக்காக பேரனின் உயிரைக் கொல்லாமல் அருள்புரிந்தார். வாமன அவதாரத்தில் மட்டும், பகவான் அசுரர்களைக் கொல்லாமல் விட்டதாலும், ஆண்டாள் அவரை உத்தமன் என்று பாராட்டிப் பாடியதாகச் சொல்வர்.

இவனும் மாயன் தான்: மாயம் செய்வதில் வல்லவன் என்பதால் கிருஷ்ணருக்கு மாயன் என்ற பெயருண்டு.  மாயன் என்ற சொல் வாமனருக்கும் பொருந்தும். குள்ளமாக வந்து மகாபலியிடம் மூன்றடிமண் கேட்டார். ஆனால், திருவடியால் அளக்கும்போது திரிவிக்ரமானாய் வானுக்கும் பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்தார். சின்ன அடியைக் காட்டி பெரிய அடியால் பூமியை அளந்ததால் வாமனருக்கும் மாயன் என்ற பெயர் உண்டானது.

இவனே உத்தமன்: மனிதர்களில் நான்கு வகையினர் உண்டு. அதமா அதமன், அதமன், மத்யமன், உத்தமன் என்பவை எவை. பிறரையும் வாழ விடாமல், தானும் வாழாமல் இருக்கும் பயனற்றவனே அதமா அதமன். தான் மட்டும் வாழ நினைப்பவன் அதமன். தான் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என நினைப்பவன் மத்யமன். தான் கெட்டாலும் பிறர் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவன் சிறந்த உத்தமன். பிறரிடம் கையேந்தி யாசகம் பெறுவது இழிசெயல். தனக்கு இழிவானாலும், தேவர்களின் நன்மைக்காக வாமனர் மகாபலிசக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்டார். அதன் காரணமாகவே ஆண்டாள் வாமனரை உத்தமன் என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறாள்.

வேல் அளித்த நாயன்மார்: சீர்காழியில் திருமால், உலகளந்த பெருமாள் என்னும் திருநாமத்துடன் திருவடி உயர்த்தி நிற்கும் காட்சியைத் தரிசிக்கலாம். இங்கு திருமங்கையாழ்வார், திருஞானசம்பந்தரின் முன்னிலையில் பாசுரம் பாடியது குறிப்பிடத்தக்கது. அப்பாடலைக் கேட்டு மகிழ்ந்த சம்பந்தர், தன் கையிலிருந்த வேலை ஆழ்வாருக்குப் பரிசாகக் கொடுத்தார். இங்கு பெருமாள் ஒரு காலை உயர்த்தி இருப்பதோடு, ஒரு விரலையும் மேலே உயர்த்தியபடி நிற்கிறார். மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே என்று கேட்பதுபோல இது அமைந்துள்ளது. உன்னிடமுள்ள ஆணவம் என்ற ஒன்றே ஒன்றை மட்டும் விடு. தூக்கிய என் திருவடியை உனது சிரசிலும் வைப்பேன், என்று சொல்வதுபோலும் இருக்கிறது.

முப்பெரும் தீர்த்தம்: வாமனர் யாசகம் பெற்ற போது, அதை தாரை வார்த்து கொடுப்பதற்காக மகாபலியின் மனைவி விந்தியாவளி கிண்டியில் (கெண்டி) இருந்து தீர்த்தம் வழங்கினாள். அந்த தீர்த்தம் கையில் பட்டதும் வாமனர் திரிவிக்ரமராக மாறி உலகத்தை அளக்கத் தொடங்கினார். அவரது திருவடி பிரம்மாவின் உலகமான சத்தியலோகத்தை அடைந்தது. திருவடியைக் கண்ட பிரம்மா, தன்னுடைய கமண்டல தீர்த்தத்தை அபிஷேகம் செய்து பாதபூஜை செய்தார். பின், அந்த திருவடி, அண்டத்தைச் சென்றடைந்தது. அண்டத்தைச் சுற்றி ஆவரணஜலம் என்ற தீர்த்தம் உண்டு. அதுவும் வழியத்தொடங்கியது. கையில் வாங்கிய கிண்டித்தீர்த்தம், பிரம்மாவின் அபிஷேக தீர்த்தம், ஆவரண தீர்த்தம் மூன்றும் சேர்ந்து நேர்கோட்டில் விழுந்தது. இதில் பிரம்மாவின் அபிஷேக தீர்த்தமே மதுரை திருமாலிருஞ்சோலையில் (அழகர்கோவில்) நூபுர கங்கையாகக் கொட்டுவதாக ஐதீகம்.

மந்திர மரம்: திருமால் வாமனராக அவதரித்ததும், ஐந்து வயதில் உபநயன நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சூரியனே நேரில் வந்து வாமனருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்தார். பார்வதிதேவி முதல் பிக்ஷை (யாசகம்) இட்டாள். அப்போது பலாச தண்டத்தைக் கையில் ஏந்தி வாமனர் காட்சிஅளித்தார். பலாசதண்டம் வழங்குவதற்கு காரணம் ஒன்று உண்டு. பலாசம் என்பது ஒரு மரம். ஒருசமயம், வேதவிற்பன்னர்கள் பலர் ஒன்றுகூடி, பலாசமரத்தின் அடியில் அமர்ந்து காயத்ரி மந்திரத்தின் மகத்துவத்தைப் பேசினர். அம்மந்திரத்தில் மூன்று பாகம் இருப்பது போல, அந்த மரத்தின் இலைகளும் மூன்றுகூறாக மாறிவிட்டன. பலாசதண்டத்துடன் வாமனரின் தேஜஸ் ஜொலித்தது.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar