பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தொட்டிபாளையத்தில் விளையாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. தொட்டிபாளையத்தில் விநாயகப் பெருமான், விளையாட்டு மாரியம்மன், எல்லை முனியப்பன், கருப்பராயன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி சிறப்பு பூஜைகள், மகா கும்பாபிஷேகம் ஆகியன நடந்தன. நிகழ்ச்சியில், பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகம் செய்திருந்தது.