பதிவு செய்த நாள்
31
ஆக
2020
08:08
மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் விருக்ச பீடத்தில், 27 நட்சத்திரங்களுக்கான, சித்தர்களின் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுமுகை கிச்சகத்தியூரில் விருக்ச பீடம் உள்ளது. இங்கு, 27 நட்சத்திரங்களுக்கு அதற்குரிய பரிகார விருட்சங்களும், (மரங்கள்), அதி தேவதைகளின் சிலைகளும் உள்ளன. நேற்று, நட்சத்திரங்களுக்கு உரிய, 27 சித்தர்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. காலை, 5:00 மணிக்கு சித்தர்களின் உருவச்சிலைகள் வைத்து, அதன் முன் கலசங்கள் அமைத்து, யாக பூஜை செய்யப்பட்டது. பின்பு, அந்தந்த அதி தேவதை பீடத்தில், சித்தர்களின் உருவச்சிலைகள் பதிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, பீடத்தின் நிர்வாகி லட்சுமி தாச சாமி செய்திருந்தார்.