சபரிமலை:சபரிமலையில் திருவோண பூஜைகள் தொடங்கின. ஊழியர்கள் அத்தப்பூ கோலமிட்டனர். தந்திரி ஓண விருந்தை தொடங்கி வைத்தார்.
திருவோண பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிேஷகம், கணபதி ேஹாமம் நடைபெற்றது.உஷபூஜைக்கு பின்னர் புதிய கீழ்சாந்தி (உதவி பூஜாரி)தேர்வு நடைபெற்றது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முக தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஹரிப்பாட்டை சேர்ந்த சங்கரன் நம்பூதிரி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவி காலம் ஒரு ஆண்டாகும். மேல்சாந்திக்கு உதவியாக நைவேத்யம் செய்வது உள்ளிட்ட பணிகளை இவர் மேற்கொள்வார். இதில் தேவசம்போர்டு தலைவர் வாசு, உறுப்பினர்கள் விஜயகுமார், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.திருவோணத்துக்கு முந்தைய நாள் நடைபெறும் திருவோண சத்ய என்ற ஓண விருந்து மதியம் நடைபெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப் படாததால் ஊழியர்களுக்காக சிறிய அளவில் நடத்தப்பட்டது. ஊழியர்கள் நேற்று கோயிலின் வலது பக்கம் பெரிய அளவில் அத்தப்பூக்கோலம் அமைத்திருந்தனர். அதில் கோயிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்டள்ள தத்வமசி என்ற வார்த்தை பூக்களால் அமைக்கப்பட்டிருந்தது. நீ தேடும் கடவுள் நீதான் என்பது இதன் பொருளாகும்.