நாகை : கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற கேது பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு வழிபாடு செய்தனர்
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அருள்மிகு சௌந்தரநாயகி அம்பாள் சமேத நாகநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவில் நவக்கிரகங்களில் சாயா கிரகம் என்று அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஒன்னரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னோக்கி பெயர்ச்சி அடையும் அருள்மிகு கேதுபகவான் இன்று மதியம் 2:16 மணிக்கு தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசித்தார். கேது பெயர்ச்சியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கேது பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சரியாக 2:16 மணிக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
முன்னதாக பலவர்ண வஸ்திரம் மற்றும் பூ மாலைகள் நாகாபரணம் ஆகியவற்றைக்கொண்டு கேது பகவானுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது கேது பெயர்ச்சியை ஒட்டி கோவிலில் நடைபெற்ற ஹோமம் மற்றும் அபிசேக ஆராதனைகளை கோவில் அர்ச்சகர் கல்யாணசுந்தர குருக்கள் தலைமையில் மணி பட்டு குருக்கள், கார்த்திகேய குருக்கள் ஆகியோர் செய்து வைத்தனர் கேது பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம் ரிஷபம் கடகம் சிம்மம் துலாம் விருச்சிகம் தனுசு கும்பம் மீனம் ஆகிய ராசிகளை கொண்ட பக்தர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது கேது பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர் கேது பெயர்ச்சி மகா விழாவை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப் பட்டனர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு சுவாமி தரிசனம் செய்தனர் கேது பெயர்ச்சியை முன்னிட்டு பூம்புகார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.