பதிவு செய்த நாள்
01
செப்
2020
05:09
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி, கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, சந்தனம், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, பல்வேறு வகை திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் மூடப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சங்கராபுரம்தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் வழிபாட்டு மன்ற தலைவர் நாட்டார் ராமலிங்கம் தலைமையில் பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கொரோனா காரணமாக பக்தர்கள் வருகை தடை செய்யப்பட்டது. இதே போன்று சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் சிவன் கோவில், தியாகராஜபுரம், முக்கனுார், கடுவனுார், முதல் பாலமேடு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.