கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் கோயில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுற்றுலா நகரான கொடைக்கானலில் பிரசித்திபெற்ற குறிஞ்சி ஆண்டவர், குழந்தை வேலப்பர், ஆனந்தகிரி பெரியமாரியம்மன் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. ஐந்துமாத ஊரடங்க்கு பின் கோவில்கள் நேற்று திறந்து இருந்தது. பக்தர்கள் சமூக இடைவெளி யோடு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூறுகையில், கோயிலில் சுவாமி தரிசனம் செய்தது மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனமும் புத்துணர்வாக இருப்பதாக தெரிவித்தனர்.