காரைக்குடி: காரைக்குடியில் கோயில்கள் நேற்று திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்தனர். கொரோனா ஊரடங்கால் 5 மாதங்களாக கோயில்கள் மூடப்பட்டு இருந்தன. ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன. காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில், கொப்புடையநாயகி அம்மன் கோயில் உட்பட பல்வேறு கோயில்கள் நேற்று திறக்கப்பட்டன. மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலின் நுழைவுவாயிலில் பக்தர்கள்கால்களை கழுவுவதற்குமஞ்சள் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. மேலும் சானிடைசர் வழங்கப்பட்டது.பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சென்று தரிசனம் செய்தனர்.