திருப்புவனம்: காசியை விட வீசம் பெரியது என போற்றப்படும் புண்ணிய ஸ்தலம் திருப்புவனம், வைகை நதி கரையோரம் மறைந்த முன்னோர்களுக்கு ஹிந்துக்கள் திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அமாவாசை தினங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவது வழக்கம். கொரானோ பரவல் காரணமாக மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.நேற்று தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் குறைந்த அளவே வருகை தந்திருந்தனர். சமூக இடைவெளியை கடைபிடித்து திதி, தர்ப்பண நிகழ்வு நடந்தது.