திருக்கனுார்: செட்டிப்பட்டுவரதராஜப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழாவையொட்டி, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா நேற்று முன்தினம் நடந்தது. அதனையொட்டி கடந்த 30ம் தேதி மாலை 6:00 மணிக்கு பகவத் பிராத்தனை அனுக்கை, எஜமான சங்கல்பம், விஷ்வக்சேன ஆராதனை, மகாசுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு சிறப்பு ஹோமமும், காலை 10:00 மணிக்கு மகா சம்ரோக்கஷணம், சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் நடந்தது. முக்கிய நிகழ்வாக , மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் கிராம மக்கள் சமூக இடை வெளியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.