நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயம் நேற்று காலை திறக்கப்பட்டது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயம் திறக்கப்படவில்லை. அரசின் உத்தரவை தொடர்ந்து, வேளாங்கண்ணி தேவாலயம் திறக்கப்படும் என கலெக்டர் பிரவின் நாயர் அறிவித்தார். இதையடுத்து நேற்று காலை, 8:௦௦ மணிஅளவில் ஆரோக்கியமாதா தேவாலயம் திறக்கப்பட்டது. தேவாலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசைமாணிக்கம் முன்னிலையில், சுகாதாரத்துறையின் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். செப்., 8 ம் தேதி வரை வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் வேளாங்கண்ணி வருவதற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் முக்கிய நிகழ்வான செப்., 7 ம் தேதி, பெரிய சப்பரபவனியில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.