பதிவு செய்த நாள்
19
மே
2012
11:05
புதுச்சேரி: புதுச்சேரியின் பல்வேறு கோவில்களில் குருபெயர்ச்சி விழா நேற்றுமுன்தினம் நடந்தது.கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நேற்றுமுன்தினம் மாலை 4 மணிக்கு கலச பிரதிஷ்டை, கணபதி ஹோமமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம் நடந்தது. மாலை 6.18 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசித்ததையடுத்து குரு பகவான் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். லாஸ்பேட்டை முருகன் கோவில், பாகூர், பங்களா வீதியில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி சுவாமி கோவில், பாகூர் மூலநாதர்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் குரு பெயர்ச்சி விழா விமரிø சயாக நடந்தது. மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் பரிகாரங்கள் செய்து வழிபட்டனர்.