திருநாங்கூர்: திருநாங்கூர் ஸ்ரீபூமிநீளாசமேத வைகுண்ட நாதப்பெருமாள் திருப்பவித்ரோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, புருஷோத்தமநாயகிசமேத புருஷோத்தமப் பெருமாளுக்கு காவேரியில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.