வில்லியனுார்; திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.ஆண்டுக்கு ஒரு முறை வரும் மத்திய அஷ்டமி சிறப்பு வாய்ந்தது. வில்லி யனுார் அடுத்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில், நேற்று தேய்பிறை மத்திய அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. இதில், கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், 1008 அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது.