திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் ஸ்ரீஜெயந்தி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று ராஜகோபாலசுவாமி அனுமன் வாகனத்தில் அருள்பாலித்தார்.
பஞ்சகிருஷ்ணரண்ய ஷேத்திரத்தின் நான்காவது ஷேத்திரமான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும், வேணுகோபாலனுக்கு ஸ்ரீ ஜெயந்தி பிரமோற்சவ விழா கடந்த 9ம் தேதி துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று மாலை 4:00 மணிக்கு பாமா ருக்மணி சமேத ராஜகோபாலன் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி நாலாயிர திவ்ய பிரபந்தம், வேத பாராயணம், இரவு 7:30 மணிக்கு சாற்றுமுறை நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாசராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கொரோனா விதிமுறையை பின்பற்றி, வீதி புறப்பாடு இன்றி, தனிமனித இடைவெளியுடன் விழா நடந்து வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளான நாளை கருட வாகனத்தில் ராஜகோபாலன் எழுந்தருளும் சிறப்பு வைபவம் நடக்கிறது.