விழுப்புரம்; கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யபட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் குறித்து கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பின் கலெக்டர் கூறியதாவது: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்ட வரும் 17ம் தேதி நடக்கும் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.இதில், எஸ்.பி., ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், இந்து அறநிலைய துறை இணை ஆணையர் செந்தில் வேலவன், உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு உறுப்பினர் சரவணன், தேவராஜ், ராமலிங்கம், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.