திருவண்ணாமலை புரட்டாசி சனி ; கார்,வேன் ஆட்டோவில் வர தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2020 03:09
ஸ்ரீவில்லிபுத்துார் : திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் செப்.19 முதல் 5 வாரங்கள் சனிக்கிழமை நடக்க உள்ள புரட்டாசி சனி உற்ஸவத்தில் பக்தர்கள் கார்,வேன், ஆட்டோக்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பானஆலோசனை கூட்டம் சிவகாசி சப்கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. தாசில்தார் சரவணன், டி.எஸ்.பி.,நமசிவாயம், கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தரிசனம் செய்ய குழந்தைகள், முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகளுக்கு அனுமதியில்லை. மற்ற பக்தர்கள் முகக் கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்யலாம். தேங்காய் உடைக்க, அர்ச்சனை பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் அரசு டவுன் பஸ்களில் மட்டுமே வர வேண்டும். டூவீலர்களில் வருவது குறித்து இரு நாளில்முடிவு அறிவிக்கப்படும்.