மூணாறு: மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் கன்னியம்மன் கோயில் திருவிழா இரண்டு நாட்களாக நடந்தது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா கிறிஸ்துமஸ் நாளில் நடக்கும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று திருவிழா நடக்கவில்லை.
ஜன.26ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக திருவிழா நடந்தது. தேயிலை தோட்டத் தொழிலாளர்களான பக்தர்கள் விரதம் இருந்து தீ மிதித்தும், முளைப்பாரி, தீச்சட்டி எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது.