சுவாமி திருவீதியுலா செல்ல புதிய வாகனங்கள்
பதிவு செய்த நாள்
22
பிப் 2026 12:02
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், வைகாசி விசாக தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடக்கிறது. கொடியேற்றம் துவங்கி, தேர்த்திருவிழா நிறைவு பெறும் வரை, உற்சவமூர்த்திகள், தினமும் ஒவ்வொரு வாகன காட்சியில் எழுந்தருள்வது வழக்கம். விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ரிஷப வாகனம், மயில்வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், யாழி வாகனம் உட்பட 13 வகை வாகனங்கள் உள்ளன. வீரராகவப்பெருமாள் கோவிலில், கற்பக விருட்சம், கருட வாகனம், சேஷ வாகனம், அனுமந்தவாகனங்கள் மட்டுமே உள்ளன. தேர்த்திருவிழாவின் போது, ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவர் திருவீதியுலா சென்றுவர ஏதுவாக, புதிய வாகனங்கள் வடிவமைக்க, அறங்காவலர் குழு முடிவு செய்தது. முழுவதும் பக்தர்கள், கட்டளைதாரர்கள் பங்களிப்புடன், புதிய வாகனங்கள் வடிவமைக்கப்பட்டன. அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது: பெருமாள் கோவிலில், ஆதிசேஷ வாகனம், கருட வாகனம், கற்ப விருட்சம், அனுமந்த வாகனங்கள் உள்ளன; குதிரை வாகனம் சேதமடைந்துள்ளது. விரைவில் புனரமைக்கப்படும். மொத்தம், 13 வாகனம் தேவை; ஆறு வாகனங்கள் மட்டும் உள்ளன; புதிதாக, ஏழு வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திருப்பதி, ஸ்ரீரங்கத்தில் இருப்பது போல், பல்லாக்கு, கஜ வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், யாழி வாகனம், சூரியபிரபை – சந்திரபிரபை வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சமுதாய மக்கள் சார்பில், க ட்டளை பூஜைக்கான வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம், தம்மம்பட்டியில் இருந்து வடிவமைக்கப்பட்டு, கோவிலுக்கு வந்துள்ளன. விரைவில், உபயதாரர்கள் கவுரவிக்கப்பட்டு, முறைப்படி கோவில் வசம் ஒப்படைக்கப்படும்.
|