குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2026 12:02
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
குன்றத்துார் மலை மீது, பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. தமி ழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் இதுதான்.
அறங்காவலர் குழு முயற்சியால், 496 ஆண்டுகளுக்கு பின் 2024 முதல், 10 நாள் பிரம்மோத்சவ விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து மூன்றாம் ஆண்டு மாசி பிரம்மோத்சவ விழா நேற்று துவங்கியது.
அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. காலை 8:00 மணிக்கு கேடய வாகனத்திலும், மாலை 6:00 மணிக்கு தங்க மயில் வாகனத்திலும் முருகபெருமான் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோத்சவ விழாவில் 5ம் நாள் திருக்கல்யாணமும், 7ம் நாள் ரத உத்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா ஆகியோர் செய்துள்ளனர்.