புரட்டாசி சனிக்கிழமை பாலமலை கோவிலில் சிறப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2020 11:09
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை ரங்கநாதர் திருக்கோயில் உள்ளது. ராமானுஜர் வருகை பெற்ற திருத்தலம் என்ற பெயர் பெற்றது. இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆன இம்மாதம், 19ம் தேதி பெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவையொட்டி காலை, 7.00 மணி, மதியம், 11.00 மணி, இரவு, 7.00 மணி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இம்மாதம், 26ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளுகிறார். மூன்றாம் சனிக்கிழமை சேஷ வாகன உற்சவமும், நான்காம் சனிக்கிழமை கருட வாகன உற்சவமும், ஐந்தாம் சனிக்கிழமை யானை வாகன உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் முதல் பாலமலை கோயில் வரை அரசு சிறப்பு பஸ்கள் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தெரிவித்தார்.