பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் வர துவங்கியுள்ளதால் மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. செப்.1 முதல் இணையதளத்தில் பதிவு செய்து பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று வெளிமாவட்ட பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. அரசு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் படிப்பாதை வழியாக சென்று தரிசனம் செய்தனர். அடிவார கடைகள் திறப்பு, பக்தர்கள் வருகை அதிகரிப்பு ஆகியவற்றால் பழநி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.