தேவநாத சுவாமி கோவில் பிரம்மோற்சவம்: கொரோனாவால் ஒரே நாளில் முடிந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2020 02:09
கடலுார்; கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், 10 நாட்கள் நடைபெறும் சித்திரை மாத பிரம்மோற்சவம், கொரோனா காரணமாக ஒரே நாளில் நடந்து முடிந்தது.
தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கோவில்கள் மூடப்பட்டன. இதனால், கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் விமர்சையாக நடைபெறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. கடந்த 1ம் தேதி அரசு உத்தரவின்படி கோவில்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து . திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை ஒரே நாளில் நடத்தி முடிக்க இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது.அதன்படி நேற்று காலை 6:30 மணி்க்கு கொடியேற்றம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தேசிகர் பிரம்மோற்சவம் வரும் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 29ம் தேதி வரை நடைபெறும் உற்சவத்தில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், உள் புறப்பாடு நடக்கிறது.