Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி பூஜைகளுக்காக சபரிமலை நடை ... தெய்வச்சிலை நல்லுாரில் பூத்து குலுங்கும் 300 ஆண்டு பழமையான ருத்திராட்ச மரம் தெய்வச்சிலை நல்லுாரில் பூத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை, ஆண்டிபட்டியில் 9ம் நுாற்றாண்டு செக்கு கல் வெட்டு
எழுத்தின் அளவு:
மதுரை, ஆண்டிபட்டியில் 9ம் நுாற்றாண்டு செக்கு கல் வெட்டு

பதிவு செய்த நாள்

15 செப்
2020
01:09

மதுரை : மதுரை வாடிப்பட்டியில் 9ம் நுாற்றாண்டின் செக்கு கல்வெட்டை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜகோபால் சில மாதங்களுக்கு முன் கண்டுபிடித்த நிலையில் ,தேனி ஆண்டிபட்டியில் 9ம் நுாற்றாண்டின் செக்கு கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் கண்டுபிடித்துள்ளார்.

காந்திராஜன் கூறியதாவது: ஆண்டிபட்டியில் ஒரு ஓடையில் செக்கு கல்வெட்டு இருப்பதை மணி, சோலை பாலு, சுந்தரபாண்டியனுடன் கண்டறிந்தேன். இதில் தெந்முட்ட நாட்டு கண்ணிமங்கலத்து குடியான் சேவடி இடுவிச்ச செக்கு என வட்டெழுத்தில் பொறித்துள்ளனர். இது 9ம் நுாற்றாண்டின் பாண்டியர் கால கால்வெட்டு என ஆய்வாளர் ராஜவேலு தெரிவித்தார்.
அந்த காலத்தில் வெளியூர் பயணிக்கும் பயணிகள், துறவிகள், வணிகர்கள், மக்கள் உணவு சமைக்க நீர்நிலை அருகே செக்கு செதுக்குவர். இதை கோயில்களுக்கு மன்னர், மக்கள் தானமாக தரும் போது தந்தவர் விபரம் பொறிக்கப்படும்.இக்கல்வெட்டு மதுரை கிண்ணி மங்கலத்தில் கிடைத்த தமிழ் பிராமி, வட்டெழுத்து கல்வெட்டுடன் ஒன்றி போகிறது.இதிலுள்ளசேவடி இறை தொண்டு செய்யும் சேவடி கூட்டம் என்பவர்களை குறிக்கிறது. பராம்பரிய பெருமையுள்ள கல்வெட்டை பாதுகாக்க வேண்டும், என்றார்.

உதவி பேராசிரியர் ராஜகோபால் கூறியதாவது: வாடிப்பட்டி வெ.பெரியகுளம், சரந்தாங்கியில் ஆய்வு செய்த போது செக்கு கல்வெட்டை கண்டறிந்தேன். ஆய்வாளர் ராமர், வேலுச்சாமி படியெடுத்து 1300 ஆண்டுகளுக்கு முந்தையது, என கூறினர். 9ம் நுாற்றாண்டின் முற்கால பாண்டியர் கால கல்வெட்டான இதில் காடனுத்த நாடி இடுவித்த செக்கு என வட்டெழுத்தில் பொறித்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் கூறினார். காடனுத்த நாடி என்பதற்கு செக்கை உருவாக்கியவர் என்று பொருள், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
சென்னை; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; கொடி இறக்கத்துடன்  ஸ்ரீவாரி சாளக்கட்ட பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.திருப்பதி ஏழுமலையான் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி மண்டலத்தில் வேடாம் கிராமத்தில் வீற்றிருக்கும் தட்சிண ... மேலும்
 
temple news
திருவொற்றியூர் ; திருவொற்றியூரில் அமைந்துள்ள  ஓம் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் 501 பெண்கள் பால் குடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar