தெய்வச்சிலை நல்லுாரில் பூத்து குலுங்கும் 300 ஆண்டு பழமையான ருத்திராட்ச மரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2020 01:09
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே வெள்ளாமரிச்சுக்கட்டி ஊராட்சியில் உள்ள தெய்வச்சிலை நல்லுாரில் 300 ஆண்டு பழமையான ருத்திராட்ச மரத்தில் தற்போது பூக்கள் பூத்துள்ளது.
இங்குள்ள பூரண, புஷ்கலா சமேதஅய்யனார் கோயில்வளாகத்தில் அரியவகை ருத்திராட்ச மரம் உள்ளது.சிவலிங்க பூஜையில் பிரதான இடத்தை பிடிப்பது ருத்ராட்சமாகும். மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய ருத்ராட்ச மரம், உத்தரகோசமங்கை அருகே உள்ள தெய்வச்சிலை நல்லுாரில் வளர்ந்திருப்பது அரிய விஷயமாக கருதப்படுகிறது. தெய்வச்சிலை நல்லுாரைச் சேர்ந்த விவசாயிபூமிநாதன் கூறியதாவது:300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அய்யனார்கோயில் வளாகத்தில்வளர்ந்து காணப்படுகிறது. ஆவணியில் பூத்து குலுங்கும், ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ருத்திராட்சக் காய்கள்கிடைக்கும். கால்நடைகளிடமிருந்து பாதுகாக்க வேலி அமைத்து,பராமரித்து வருகிறோம் என்றார்.