பதிவு செய்த நாள்
21
செப்
2020
11:09
சென்னிமலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவிலுக்கு, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று வந்தார். பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர், சென்னிமலையில் நடந்த கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது: சென்னிமலை முருகன் கோவிலில், அக்., 2ல் கந்தசஷ்டி கவசம் பாராயணம், வேல் வழிபாடு இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற உள்ளது. இதில், 108 பேர் பாராயணம் படிக்க உள்ளனர். அதே நேரத்தில் தமிழக அளவில், 10 ஆயிரம் பேர் பாராயணம் படிக்க உள்ளனர். இதில், சரவணம்பட்டி கவுமார மட ஆதீனம், சிரவை ஆதீனம், மருதாசல அடிகளார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பாராயண நிகழ்ச்சி முடிந்ததும், மலையடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் சொற்பொழிவு நடக்கிறது. கருப்பர் கூட்டம் கந்த சஷ்டியையும், முருகப்பெருமானையும் இழிவுபடுத்தி உள்ளனர். தமிழகத்தில் ஆன்மிக அரசியல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.