பதிவு செய்த நாள்
21
செப்
2020
12:09
கோபி: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், தம்பிக்கலை ஐயன் கோவிலுக்கு வரும், பக்தர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே, தங்கமேட்டில் பிரசித்தி பெற்ற தம்பிக்கலை ஐயன் கோவில் உள்ளது. ராகு, கேது தோஷம் நீக்கும், பிரசித்தி பெற்ற ஸ்தலமாக உள்ளது. கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச், 23 முதல் கோவில் மூடப்பட்டது. ஊரடங்கு உத்தரவு தளர்வால், கடந்த, 1ம் தேதி முதல், கோவில் திறக்கப்பட்டு, தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மூன்று கால பூஜை மட்டும் நடக்கிறது. தண்ணீர் மந்திரிப்பது மற்றும் வேப்பிலை பாடம் போடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அமாவாசை, வெள்ளி மற்றும் ஞாயிறு நாட்களில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக வார விடுமுறை நாட்களில், 3,000க்கும் மேற்பட்டோர் வருவர். ஆனால், நேற்று ஆயிரத்துக்கும் குறைவான பக்தர்களே வந்தனர். கொரோனா தொற்றால், பக்தர்களின் வருகை சரிபாதியாக குறைந்துள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.