பதிவு செய்த நாள்
24
செப்
2020
09:09
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி வேங்கடேஸ்வர வாரி சுவாமி கோவிலில், கருட சேவை நடந்தது. மேட்டுப்பாளையம் அடுத்த தென் திருப்பதி திருமலையில், வேங்கடேஸ்வர வாரி சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக, மலையப்பசுவாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார்.இவ்விழாவில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வருகிறார். நேற்று இரவு, 8:00 மணிக்கு, கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. இதில், மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். இன்று தங்க ரதமும், 26ம் தேதி காலை, 8:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது.