அகழிக்கு மத்தியில் கோவில்: பராமரிப்பின்றி வீணாகிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2020 10:09
மடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகா குமாரலிங்கம் அமராவதி ஆற்றங்கரையில் அகழிக்கு மத்தியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
அமராவதி ஆற்றங்கரை பகுதியில் பல சைவ, வைணவ கோயில்கள் உள்ளன. காலத்தால் 1,000 ஆண்டுகளை கடந்து முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் இதில் சில கோவில்கள் முறையாக பரா மரிக்கப்படாமல் பாழடைந்து வருகின்ற ன. குமரலிங்கம் அமராவதி ஆற்று பாலத்துக்கு முன்பு, அகழிக்கு மத்தியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் இதில் ஒன்றாகும்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: முன்னோர்களின் கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளது. 20 அடிக்கும் அதிக மான உயரம் கொண்ட கோவில் சுற்றுச் சுவரும்,இதற்கு உட்புறமுள்ளவளாகத்தில் வட்டவடிவமாக பக்தர்கள் தங்குவதற்கும் பிரசாதங்கள் செய்வதற்கும் திண்ணை போன்ற அமைப்பு உள்ளது.இதற்கு அடுத் ததாக 5 அடி அகலத்தில் 50 அடி வட்ட வடி வத்தில் நீர் தேக்கப்பட்டு அகழி ஏற்படுத் தியுள்ளனர். இந்த அகழிக்கு மத்தியில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோவிலுக்குள் அகழி ஏற்படுத்தி அதற்கு நீர்வரத்து உள் ளபடி அமைத்திருப்பது ஆச்சரியப்பட தக்கதாகும். 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கோவில் தினசரி பூஜை நடந்தது. தற்போது கோவில் பிரதான கதவு பூட்டப்பட்டு உள்ளது. சுவற்றின் பல இடங்களில் இடிந்து உள்ளது. கோபுரம் முழுவதும் சிலைகள் உடைந்தும் சிதைந் தும் போயுள்ளன.வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலை புதுப்பித்து பராமரிக்க வேண்டும் " என தெரிவித்தனர்.