பதிவு செய்த நாள்
24
செப்
2020
09:09
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.
அ.தி.மு.க., இளைஞர் பாசறை மாநில துணை செயலர், கோவை விஷ்ணுபிரபு, நேற்று காலை, 10:45 மணிக்கு மனைவி, மகன் உட்பட ஐந்து பேருடன், தனி ஹெலிகாப்டரில் ஸ்ரீவில்லிபுத்துார், சி.எம்.எஸ்., பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து, காரில் ஆண்டாள் கோவில் சென்று தரிசனம் செய்தனர். சக்கரத்தாழ்வார் சன்னிதியில், ஜெயலலிதா படத்துடன், ரகுபட்டர் தலைமையில் நடந்த சுதர்சன யாகத்தில் பங்கேற்றனர். யாகத்தில், உள்ளூர் கட்சி பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை.