பதிவு செய்த நாள்
21
மே
2012
11:05
மேலூர்: கோவில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என, இந்து முன்னணி மாநில கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலூரில், இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், மாநில அமைப்பாளர் முருகானந்தம் தலைமையில் நடந்தது. இணை அமைப்பாளர்கள் பொன்னையா, மூர்த்தி முன்னிலை வகித்தனர். துணை தலைவர் ஜெயக்குமார், செயலர்கள் வெள்ளையப்பன், அண்ணாத்துரை கலந்து கொண்டனர். இறைவன் முன் அனைவரும் சமம் என்றாலும், சிறப்பு தரிசன மூலம் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு உள்ளது. இதனால், கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஒரு கோடி கையெழுத்து பெற வேண்டும். மேலூரில் மாணவியர் பூ, பொட்டு வைக்கக் கூடாது எனக் கூறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட செயலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.