விஸ்வநாதர் கோயில் பாதை ஆக்கிரமிப்பு: பக்தர்கள் பாதிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2012 11:05
போடி:போடி காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பாதையில்ஆக்கிரமிக்கப்பட்டதோடு பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. போடி மயானம் செல்லும் ரோட்டின் ஆற்றோர பகுதியில் காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பவுர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள், சுமங்கலி பூஜைகளும் நடக்கிறது. இதோடு மட்டுமின்றி இங்கு சித்திரை முதல் தேதியில் அழகர் ஆற்றில் இறங்கி வரும் போது போடியில் உள்ள பெரும்பாலான பக்தர்கள் வருகை தந்து சிவனின் அருளாசி பெறுகின்றனர். போடி-காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பாதை ரோடு வசதி இன்றி குண்டும், குழியுமாக முற்களாக ஆக்கிரமித்து இருப்பதோடு குப்பைகள் தேக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. மின்கம்பங்கள் இருந்தும் விளக்கு வசதி இல்லை. கோயில் அருகே உள்ள பாதையின் இருபுறத்தையும் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மழைக்காலத்தில் சேரும் சகதியுமாக காணப்படுகின்றன. இதனால் நடந்து செல்ல கூட முடியாத நிலையில் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ரோட்டை சீரமைக்கவும், இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.பக்தர்கள், பொதுமக்களின் நலன் கருதி கோயிலுக்கும் செல்லும் பாதையில் ரோடு வசதி செய்து தருவதுடன் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.