சபரிமலை கோவில் திறப்பின் போது பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2020 09:09
திருவனந்தபுரம்: கேரளாவில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பின் போது பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவார்கள் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛ சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வெளிமாநில பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கோவிலுக்குள்ளும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறும். 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களும் குழந்தைகளும் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மலையேறும் பக்தர்கள் மாஸ்க் அணிவதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெறும். பெரும்பாலான பக்தர்கள் வெளிமாநிலங்களிலிருந்து வருவார்கள் என்பதால் கோவிலுக்குள் தங்குவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படாது இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலையில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை வரும் நவம்பர் மத்தியிலிருந்து துவங்கும் என தெரிகிறது.