மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. கருட வாகனத்தில் யாகபேரர், வியூகசுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மதுரை வீரராகவ பெருமாள் கோயிலில் நடந்த கருட சேவையில் கருட வாகனத்தில் வீரராகவ பெருமாள், ரங்கநாதர் உலா வந்து அருள்பாலித்தனர். மதுரை தெற்கு மாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பவுர்ணமியையொட்டி ஊஞ்சல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை வழிப்பட்டனர்.