பதிவு செய்த நாள்
04
அக்
2020
04:10
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயில், திருமலை நாயக்கன் பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோயில், இடிகரை உலகளந்த பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர் கோவில், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்களில் அதிகாலை திருமஞ்சனமும் அதைத்தொடர்ந்து பூஜை, சிறப்பு அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இவ்விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.