பதிவு செய்த நாள்
10
அக்
2020
02:10
அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜை, அபி ேஷகம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். இந்நிலையில், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கோவில்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில் நேற்று திறக்கப்பட்டது. காலை, 6:00 மணிக்கு காலபைரவருக்கு அஷ்டபைரவயாகம், அஷ்டலஷ்மியாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்ரயாகம் உள்ளிட்ட யாகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, 64 வகையான அபி ேஷகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், கிருமி நாசினி தெளித்து காய்ச்சல் உள்ளதா என, பரிசோதித்து அனுப்பப்பட்டனர்.