பதிவு செய்த நாள்
10
அக்
2020
10:10
பொள்ளாச்சி: புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.புரட்டாசி மாதத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நான்காவது மற்றும் கடைசி சனிக்கிழமையையொட்டி, இன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. விழாவையொட்டி, இன்று பெருமாளுக்கு, 16 வகையான அபிேஷகம், ஒன்பது வகை ஹோமங்கள், 16வகையான மலர் அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சனிக்கிழமை வழிபாட்டையொட்டி, நேற்று மாலையே சிறப்பு வழிபாடு துவங்கியது.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் இன்று காலை அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வால்பாறை ரோட்டிலுள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில், அங்கலக்குறிச்சி கோபால் சுவாமி மலைக்கோவில், ஆனைமலை பெருமாள் சுவாமி மலைக்கோவில், மற்றும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று புரட்டாசி சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.