பதிவு செய்த நாள்
11
அக்
2020
04:10
தியாகதுருகம்-தியாகதுருகத்தில் சக்ர பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.தியாகதுருகம் சந்தை மேட்டில் நஞ்சுண்ட ஞானதேசிகர் சிவன் கோவில் உள்ளது.
இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, கோவிலில் பிரதோஷம் மற்றும் தேய்பிறை அஷ்டமி பூஜை விமர்சையாக நடந்து வருகிறது.நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமியையொட்டி மாலை, வெளிபிரகார வாயிலில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சக்ர பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது.அதேபோல் மூலவர் லிங்கத்திற்கும் சிறப்பு ஆராதனை நடந்தது. சிவனடியார்கள் மற்றும் திரளான பக்தர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வழிபட்டனர். திருக்கோவிலுார்திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, அஷ்ட பைரவ பூஜை, பைரவர் மூலமந்திரம், பூர்ணாஹூதி கடம் புறப்பாடாகி, சம்ஹார பைரவருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் வழிபட்டனர்.