தங்கரத தரிசனம் எப்போது? பழநி பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2020 04:10
திண்டுக்கல்: பழநி மலைக்கோயிலில் தங்கரதம் புறப்பாடு எப்போது என பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழக கோயில்களில் முதன் முதலாக 1957ல் பழநியில்தான் தங்கரதம் இழுக்கப்பட்டது. தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். இதற்கான கட்டணம் ரூ.2000. தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தசரா தினங்கள் தவிர அனைத்து நாட்களிலும் தங்கரத உலா இருக்கும். இதனைக் காண தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மலைக்கோயில் குவிந்து விடுவர்.ஊரடங்கு தளர்வுக்கு பின் கோயில்கள் திறக்கப்பட்டாலும் இந்நிகழ்ச்சியை தவிர்த்து விட்டனர். ஓரிரு மாதங்களில் சீசன் துவங்கியதும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். எனவே கொரோனாவை தவிர்க்க பாதுகாப்பு வழிமுறைகளோடு தங்கரத புறப்பாடுக்கு ஏற்பாடு செய்யலாம். ஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவை அமைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில் தங்கதேர் புறப்பாடு காண்பதற்கென பக்தர்கள் கூட்டம் உண்டு. கொரோனாவை கருத்தில் கொண்டு நிலைக்கு 5 பேருக்கு மேல் அனுமதிக்காமல் சமூக இடைவெளியோடு தங்கரத புறப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யலாம் என்றார்.