கண்ணகி கோயில் சீரமைப்பு பணி: கண்டுகொள்ளாத தொல்லியல்துறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2020 12:10
கூடலுார் : தமிழக -கேரள எல்லையில் சேதமடைந்து வரும் பழமை வாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோயிலை சீரமைக்க தொல்லியல் துறை தயக்கம் காட்டி வருகிறது.
தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக -கேரள எல்லையான வின்னேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயில் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை இருமாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இருந்த போதிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் சீரமைக்காமல் சேதம் அடைவது அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனாவால் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கோயில் வளாகம் முட்புதர்களால் சூழ்ந்து உள்ளது.சீரமைக்க மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கேரள உயர்நீதி மன்றத்தில் 2014 ல் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணைக்குப்பின் கண்ணகி கோயிலை தொல்லியில் துறை சார்பில் சீரமைக்க ரூ.39 லட்சத்து 33 ஆயிரத்து 725 க்கு திட்ட மதிப்பீடு செய்து டெண்டர் விடப்பட்டது. ஆனால் கோயில் சுற்றுச்சுவர் மட்டும் பெயரளவில் சீரமைத்து விட்டு கோயிலை சீரமைக்க முன்வரவில்லை.