பதிவு செய்த நாள்
13
அக்
2020
02:10
செங்கல்பட்டு:செங்கல்பட்டு - திருவடிசூலம் கருமாரியம்மன் கோவிலுக்கு, அரசு சிறப்பு பஸ், நேற்று இயக்கப்பட்டது. செங்கல்பட்டு அடுத்த, திருவடிசூலம் கிராமத்தில், புகழ்பெற்ற கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, சென்னை மற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள், ஞாயிறு, விடுமுறை நாட்களில் வந்து செல்கின்றனர்.இதனால், செங்கல்பட்டு - திருவடிசூலம் கருமாரியம்மன் கோவிலுக்கு, சிறப்பு பஸ் இயக்க, கோவில் நிர்வாகம் வலியுறுத்தியது. தொடர்ந்து, மேற்கண்ட தடத்தில், சிறப்பு பஸ் இயக்க துவக்க விழா, மதுரைமுத்து சுவாமிகள் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.இந்த பஸ், ஞாயிற்றுகிழமை மட்டும் காலை, 8:00 மணி முதல், மாலை, 6:00 மணிவரை இயக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.