பதிவு செய்த நாள்
13
அக்
2020
02:10
சங்ககிரி: சங்ககிரி மலைக்கோட்டையில், மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதிக்கு, விரைவில் அனுமதி வழங்கப்படும், என, சென்னை, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் கூறினார்.
சென்னை, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், நேற்று, சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டை மதில்சுவர், படிக்கட்டு, மண்டபங்களை ஆய்வு செய்தார். பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கண்காணிப்பாளராக, இரு வாரத்துக்கு முன் பொறுப்பேற்றதால், சங்ககிரி மலையை ஆய்வு செய்ய வந்தேன். இங்கு, மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதிக்கு, தொல்லியல் துறை மூலம், விரைவில் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, மலையில் உள்ள கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்வது குறித்து கேட்டபோது, தொல்லியல் துறை சட்டப்படி, மதம் சார்ந்த நடவடிக்கை எடுப்பதில்லை. அதன் தன்மை மாறாமல் மட்டும் பாதுகாக்கப்படுகின்றன. புதிதாக புதுப்பிப்பது, தொல்லியல் துறை பன்னாட்டு ஒப்பந்தத்தை மீறியது என்றார்.