மல்லியக்கரை: மல்லியக்கரை பகுதியில், சட்டநாதர் சித்தருக்கு, சிலை அமைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆத்தூர் அருகே, மல்லியக்கரை மற்றும் தளவாய்பட்டி மலை பகுதியில், சன்னாசி வரதபெருமாள் கோவில் உள்ளது. இதில், மல்லியக்கரை மலை பகுதியை சுற்றிலும், 18 சித்தர்களுக்கும் சிலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சித்தர்களில் ஒருவரான, சட்டநாதர் சித்தர் சிலை வைத்து, மாரியம்மன், விநாயகருக்கு அபி?ஷகம் செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.